100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2019 10:15 PM GMT (Updated: 5 Sep 2019 8:28 PM GMT)

100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தக்கோரி திருவாரூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர், 

திருவாரூரில் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமாரராஜா, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வேளாண் விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரையின்படியும் உற்பத்தி செலவை விட கூடுதலாக 50 சதவீத விலை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களின் வேலையின்மையை போக்கிட 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்திட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, மாவட்ட பொருளாளர் சாமிநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலைமணி, மாவட்ட பொருளாளர் பாலையா, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் பாண்டியன் உள்்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story