ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா
ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஓட்டப்பிடாரம்,
வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு வ.உ.சிதம்பரனார் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் உள்ள வ.உ.சி. சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வ.உ.சி. இல்லத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் சுப்பையாபிள்ளை, வட்டார தலைவர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வ.உ.சி. கொள்ளு பேத்தி செல்வி, கோவில்பட்டி அரசு வக்கீல் முருகானந்தம் ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு தலைமையில் மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
ஓட்டப்பிடாரம் மெயின் ரோடு மற்றும் வ.உ.சி. இல்லத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சுகுமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துகுமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மாடசாமி, அன்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா சார்பில் மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் சந்தனகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் சிவராமன், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கிஷோர்குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் லட்சுமணன், மாநில பேச்சாளர் ஓ.எஸ்.முத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்செந்தூர் சன்னதி தெரு சைவ வேளாளர் ஐக்கிய சங்க அலுவலகம் முன்புள்ள அவரது மார்பளவு சிலைக்கு சங்க செயலாளர் சந்தனராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சங்க பொருளாளர் வேலாயுதம், நிர்வாகிகள் ஞானசுந்தரம், ஆனந்த ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சைவ வேளாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன், துணை தலைவர் ராமன், சைவ வேளாளர் பொதுநல வளர்ச்சி கழக தலைவர் மணி உள்ளிட்டோரும், அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சோடா ரவி, அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்டோரும் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story