பிறந்த நாளையொட்டி வ.உ.சி. சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
வ.உ.சி. பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி,
சுதந்திர போராட்ட தியாகியும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி கண்டோன்மெண்டில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் எதிரே உள்ள அவருடைய முழு உருவச்சிலைக்கு, அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட செயலாளர்கள் சிவா, ராஜா டேனியல்ராஜ், உறந்தை செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் தலைமை நிலைய செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன், மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் மண்டல செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் ஆர்.வி.ஹரிஹருன்பிள்ளை தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மற்றும் டெல்லியில் உள்ள வ.உ.சி. சிலை அமைப்பு மற்றும் நிர்வாகக்குழு சார்பில் நிர்வாகி வேலுப்பிள்ளை தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் டி.வி.கணேசன், பா.ம.க. சார்பில் மாநகர செயலாளர் திலீபன், நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, திருச்சி நாடார் பேரவை சார்பில் தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ், வீரமுத்தரையர் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுவன தலைவர் செல்வகுமார், புதிய நீதிக்கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பாலுபிள்ளை, அகில இந்திய வ.உ.சி. பேரவை மாவட்ட தலைவர் கண்ணதாசன்பிள்ளை, வானம் அமைப்பு சார்பில் கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து வணங்கினர்.
Related Tags :
Next Story