மாநில தேர்தல் கமிஷனராக யு.பி.எஸ். மதான் பொறுப்பு ஏற்பு
மராட்டிய மாநில புதிய தேர்தல் கமிஷனராக யு.பி.எஸ். மதான் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
மும்பை,
மராட்டிய மாநில தேர்தல் கமிஷனராக இருந்த ஜே.எஸ்.சஹாரியா நேற்று முன்தினம் பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து புதிய தேர்தல் கமிஷனராக முன்னாள் தலைமை செயலாளர் யு.பி.எஸ். மதான் நியமிக்கப்பட்டார். அவர் மராட்டிய புதிய தேர்தல் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
யு.பி.எஸ். மதான் 1983-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்தவர் ஆவார். தனது நீண்ட பணிக்காலத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி, மாவட்ட கலெக்டர், கூடுதல் தலைமை செயலாளர், மாநில தேர்தல் அதிகாரி, மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும கமிஷனர், மகாடா தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.
கடைசியாக அவர் மராட்டிய மாநில தலைமை செயலாளராக இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story