நில முறைகேடு வழக்கு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு நோட்டீசு


நில முறைகேடு வழக்கு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 6 Sept 2019 4:45 AM IST (Updated: 6 Sept 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் குமாரசாமி கடந்த 2007-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது, அரசு நிலத்தை அரசாணையில் இருந்து விடுவித்து முறைகேடு செய்ததாக அவர் மீது லோக்அயுக்தா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு, 

போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்த புகாரில் உண்மை இல்லை என்று கூறி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து நிலமுறைகேடு வழக்கு கைவிடப்பட்டது.

இந்த நிலையில் போலீசார் வழங்கிய இந்த அறிக்கையை எதிர்த்து சமூக ஆர்வலர் மகாதேவசாமி என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 

அந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 4-ந் தேதி நேரில் ஆஜராகும்படி குமாரசாமிக்கு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளார். 

Next Story