துணை சபாநாயகராக பாலன் எம்.எல்.ஏ. பொறுப்பேற்றார் நாராயணசாமி-அமைச்சர்கள் வாழ்த்து
புதுவை சட்டமன்ற துணை சபாநாயகராக எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி,
புதுவை சட்டமன்றத்தில் காலியாக இருந்த துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தலை சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் முன்வரவில்லை. வேட்புமனு செய்வதற்கு இறுதிநாளான நேற்று முன்தினம் பகல் 12 மணிவரை வேறு யாரும் வராததால் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
இந்தநிலையில் சட்டசபையில் பூஜ்ய நேரம் முடிந்ததும் துணை சபாநாயகராக எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துணை சபாநாயகர் ஆசனத்துக்கு முறைப்படி அழைத்து வந்து அமரவைத்தனர். அவருக்கு சபாநாயகர் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவரை வாழ்த்திப் பேசினார்கள். இறுதியாக துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் ஏற்புரையாற்றினார். தொடர்ந்து அவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார்.

Related Tags :
Next Story