திருத்துறைப்பூண்டியில், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


திருத்துறைப்பூண்டியில், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 1:47 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி  நகராட்சி பகுதிகளில் 24 வார்டுகள் உள்ளன. இதில் பள்ளிவாசல் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர்  வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வேறு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகுவதாகவும், அதனால் தங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யவில்லை என குற்றம் சாட்டியும், உடனடியாக குடிநீர் வழங்கக்கோரியும் நேற்று பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ரெயில்வே கேட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். 
இதனால் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்
பட்டது.

Next Story