புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது


புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 7 Sept 2019 4:00 AM IST (Updated: 6 Sept 2019 7:26 PM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி திருவாரூரில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு தலைவர் எச்.அழகிரி தலைமை தாங்கினார். செயலாளர் பாலதண்டாயுதம், வங்கி ஊழியர் சங்க தலைவர் காளிமுத்து, அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் முருகானந்தம், சங்க நிர்வாகிகள் அழகிரி, சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். 

பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story