புஞ்சைபுளியம்பட்டி அருகே இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளி கொலை
புஞ்சைபுளியம்பட்டி அருகே இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
புஞ்சைபுளியம்பட்டி,
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள மங்கரசு வலையபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் முருகேஷ் (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த கம்பெனியில் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார்.
ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்ததால் முருகேசுக்கும், அந்த சிறுமிக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆசை வார்த்தைக்கூறி அந்த சிறுமியை முருகேஷ் தன்னுடைய வீட்டுக்கு கடந்த வாரம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை அந்த சிறுமியின் தந்தையான 50 வயது தொழிலாளி கண்டித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை, அவருடைய பெற்றோரிடம் முருகேஷ் ஒப்படைத்துவிட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்த சிறுமியின் தந்தையிடம், முருகேஷ் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த முருகேஷ் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து சிறுமியின் தந்தையை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிறுமியின் தந்தை அந்த இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்து விட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி சிறுமியின் தாய், புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முருகேஷ் மீது அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தந்தை நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story