திருப்பூரில் ஆசிரியையிடம் 9 பவுன்நகை பறிப்பு; மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கைவரிசை
திருப்பூரில் ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 2 பேர் 9 பவுன்நகையை பறித்து சென்றனர்.
நல்லூர்,
திருப்பூர், மங்கலம் ரோடு, குள்ளேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ஐசக் (வயது 52). இவரது மனைவி அன்னபூரணி ( 49). முத்தணம்பாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து முத்தணம்பாளையத்திற்கு சக ஆசிரியைகளுடன் அரசு பஸ்சில் சென்றார்.
முத்தணம்பாளையம் பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சை விட்டு அன்னபூரணி இறங்கி பள்ளிநோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள விநாயகர் கோவில் கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 ஆசாமிகள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அந்த ஆசாமிகள், ஆசிரியை அன்னபூரணி மீது இடிப்பது போல் வந்துள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்த ஆசாமி, திடீரென்று அன்னபூரணி கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அன்னபூரணி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். அதற்குள் அந்த ஆசாமிகள் 9 பவுன்நகையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து திருப்பூர் ஊரக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில், ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
பட்டப்பகலில் ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story