ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கருமத்தம்பட்டி யில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
முன்னாள் மத்திய மந்திரி் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில், கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா, கணபதி சிவக்குமார், சவுந்தரகுமார், வக்கீல் கருப்புசாமி, மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஹரிகரசுதன், வடவள்ளி காந்தி, சாய்ஸ் சாதிக், ராம.நாக ராஜ், அரோமா நந்தகோபால், துளசிராஜ், டென்னிஸ் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருமத்தம்பட்டி நால்ரோட்டில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். இதில், கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை. ஆனாலும் தடையை மீறி சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டத்தில், ஐ.என்.டி.யு.சி. தலைவர் கோவை செல்வன், எச்.எம்.எஸ் தலைவர் ராஜாமணி, முருகேசன், கணேசமூர்த்தி, நவீன்குமார், விஜயகுமார், செல்வபுரம் ஆனந்த், கருமத்தம்பட்டி தங்கவேல், கணேசன், காட்டூர் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story