கருங்கல்-இரவிபுதூர் கடை சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம்: ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை


கருங்கல்-இரவிபுதூர் கடை சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம்: ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 7 Sept 2019 3:45 AM IST (Updated: 7 Sept 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல்-இரவிபுதூர் கடை சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கருங்கல்,

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்-இரவிபுதூர் கடை செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் இருந்து எட்டணி ஜங்ஷன் வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் ஓடை இல்லாத காரணத்தாலும், சரியான முறையில் பராமரிக்காத காரணத்தாலும் சாலை சேதம டைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த சாலையை 10 நாட்களுக்குள் சீரமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எனது தலைமையில் பொதுமக்கள் மற்றும் கருங்கல் நகர அனைத்து வர்த்தகர்கள், கருங்கல் நகர அனைத்து வாகன ஓட்டுனர்களை ஒன்று திரட்டி கருங்கல் பஸ் நிலையத்தின் முன்புறம் பாடை கட்டி சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story