பொள்ளாச்சி அருகே, கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி
பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
கோவை,
கோவை மசக்காளிபாளையம்பகுதியை சேர்ந்தவர்பன்னீர்செல்வம். இவரது குடும்பத்தினர் 8பேர் பழனியில்இருந்துகோவைக்கு காரில்வந்து கொண்டிருந்தனர். அப்போது பொள்ளாச்சி அருகேகெடிமேடுபி.ஏ.பி.வாய்க்காலில் கார் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 8 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அமைச்சர்எஸ்.பி.வேலுமணிநேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர்எஸ்.பி.வேலுமணிமுதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலாரூ.2 லட்சம் வீதம் மொத்தம்ரூ.16 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அப்போது கலெக்டர்ராஜமணி, வருவாய்கோட்டாச்சியர்தனலிங்கம், தாசில்தார் தேவநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து அமைச்சர்எஸ்.பி.வேலுமணிகூறியதாவது:-பன்னீர் செல்வத்தின்குடும்பத்தை சேர்ந்த8 பேர் கடந்த 13.3.2019அன்று பழனியில்இருந்து கோவைக்கு வரும் வழியில் பொள்ளாச்சி அருகேகெடிமேடுஎன்னுமிடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்தகார் தாறுமாறாகசென்றுஅருகில் இருந்தபி.ஏ.பி.வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த பன்னீர்செல்வத்தின்குடும்பத்தை சேர்ந்த8பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்குமுதல்-அமைச்சர் ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து, பாதிக்கப்பட்டோர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலாரூ.2 லட்சம் வீதம் மொத்தம்ரூ.16 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று (நேற்று) பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story