எடப்பாடி போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி
எடப்பாடி போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி,
இந்த நிலையில் அழகேசன், தனக்கு சொந்தமான நிலத்தை கண்ணன் என்பவரிடம், பணம் வாங்கிக்கொண்டு பவர் எழுதி கொடுத்துள்ளார். அது சம்பந்தமாக அழகேசன், கண்ணன் இடையே பிரச்சினை ஏற்பட்டு சங்ககிரி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அழகேசன் பிரச்சினைக்குரிய நிலத்தில் ஜல்லிகற்கள் கொட்டியுள்ளார். அதனை கண்ணன் அகற்றியுள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அழகேசன் எடப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தனியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அழகேசன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் எடப்பாடி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையம் முன்பு தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் எடப்பாடி போலீஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
எடப்பாடியை அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 48) விசைத்தறி தொழிலாளி. இவருக்கு சாந்தி (44) என்ற மனைவியும், கலைவாணி (21), ஜீவா (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் அழகேசன், தனக்கு சொந்தமான நிலத்தை கண்ணன் என்பவரிடம், பணம் வாங்கிக்கொண்டு பவர் எழுதி கொடுத்துள்ளார். அது சம்பந்தமாக அழகேசன், கண்ணன் இடையே பிரச்சினை ஏற்பட்டு சங்ககிரி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அழகேசன் பிரச்சினைக்குரிய நிலத்தில் ஜல்லிகற்கள் கொட்டியுள்ளார். அதனை கண்ணன் அகற்றியுள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அழகேசன் எடப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தனியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அழகேசன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் எடப்பாடி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையம் முன்பு தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் எடப்பாடி போலீஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story