வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு உயர்வு - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்


வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு உயர்வு - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
x
தினத்தந்தி 8 Sept 2019 4:30 AM IST (Updated: 7 Sept 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒருமுறை மட்டும் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நிபந்தனைகளுக்குட்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றுள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள மனுதாரர்கள் உதவித்தொகை விண்ணப்ப படிவத்தை தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story