கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2019 3:15 AM IST (Updated: 8 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர், 

தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனி யாருக்கு வழங்காமல், அரசே ஏற்று நடத்த வேண்டும். பணி நீக்கத்தால் உயிர் நீத்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றவும், சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நூதனமுழக்கப் போராட்டம் நேற்று மாலை நடந்தது. இதற்கு சங்கத்தின் உட்கோட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மதியழகன், அண்ணாதுரை, ராமநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் சுப்ரமணியன் விளக்கவுரையாற்றினார். மாநில செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அரசு அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். பணியின்போது இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story