காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்


காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Sept 2019 3:45 AM IST (Updated: 8 Sept 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

பாபநாசம், 

பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி, பண்டாரவாடை, சக்கராப்பள்ளி, பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் ராமலிங்கம் எம்.பி. பொதுமக்களை சந்தித்து குறை கேட்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அந்தியோதயா ரெயில் பாபநாசத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளேன். ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை நிறைவேற்றினால் நிலத்தடி நீர் கெட்டுப்போகும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு, மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைசெல்வன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செல்வமுத்துகுமரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story