காரிமங்கலம் அருகே, கஞ்சா விற்ற 2 பேர் கைது
கரிமங்கலம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள முக்குலம் முனியப்பன் கோவில் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது 2 பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது பெங்களூருவை சேர்ந்த பிரபாகரன் (வயது25), சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (22) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 240 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story