‘ஹெல்மெட் விநாயகர்’ சிலைக்கு பொதுமக்கள் வரவேற்பு


‘ஹெல்மெட் விநாயகர்’ சிலைக்கு பொதுமக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 8 Sept 2019 4:00 AM IST (Updated: 8 Sept 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் 17 வருடங்களாக விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றது.

திரு.வி.க. நகர்,

 இந்நிலையில் இந்த வருடம் விநாயகர்சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி, ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் விநாயகர் அமர்ந்து செல்வது போல் சிலையை வடிவமைத்து, பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு ‘ஹெல்மெட் அணிவதன் அவசியம்’ குறித்த விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டது.

இந்த சிலைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. போக்குவரத்து போலீசார் சார்பில் சிலை அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. ஹெல்மெட் விநாயகர் சிலை இன்று முறைப்படி கடலில் கரைக்கப்படுகிறது.

Next Story