உத்திரமேரூர் அருகே பல்லவர் கால சாமி சிலைகள் கண்டெடுப்பு


உத்திரமேரூர் அருகே பல்லவர் கால சாமி சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 7 Sep 2019 9:49 PM GMT (Updated: 7 Sep 2019 9:49 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள காவனூர்புதுச்சேரி கிராமத்தில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் க.பாலாஜி தலைமையில் வடிவேலு, கோகுலசூர்யா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

உத்திரமேரூர்,

அப்போது பொன்னி அம்மன் கோவில் அருகே உள்ள வயல்வெளியில் கேட்பாரற்று கிடந்த தன் தலையை தானே பலிகொடுக்கும் அரிகண்ட வீரன் சிற்பத்துடன் கூடிய கொற்றவை தேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் அரசு நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே இரு பெண்கள் வாழ்த்தி வணங்கும் நிலையில் உள்ள அய்யனார் சிலையும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 2 சிலைகளையும் அதிகாரிகள் மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது கொற்றவை தேவி சிலையும், அய்யனார் சிலையும் சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவர் காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்தது.

Next Story