ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்கம்பம் உடைந்து விழுந்தது; 2 தொழிலாளர்கள் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்கம்பத்தில் ஏறியபோது அது உடைந்து விழுந்ததால் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு மேற்கு புறத்தில் உள்ள திருப்பாற்கடல் பகுதியில் புதிய மின்கம்பம் நடும் பணி நடந்தது. இதற்கான பணியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மின்கம்பம் நடப்பட்டதும் மின்வாரிய தொழிலாளர்கள் நொச்சிக்குளத்தை சேர்ந்த குருசெல்வம்(வயது 21), சின்ன அத்திக்குளத்தை சேர்ந்த ஸ்ரீராம்(22) ஆகியோர் மின்கம்பத்தில் ஏறினர். அப்போது திடீரென மின்கம்பம் உடைந்து விழுந்தது.
இதனால் அவர்கள் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதைதொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடுவதற்காக பல இடங்களில் மின்கம்பங்கள் போடப்பட்டுள்ளன. இவை மாதக்கணக்கில் பயன்படுத்தப்படாமல் தரையிலேயே கிடக்கின்றன. குறிப்பாக செண்பகத்தோப்பு செல்லும் சாலையில் கோட்டைப்பட்டிக்கு அருகே இருப்பு வைக்கப்பட்டுள்ள புதிய மின்கம்பங்களில் பெரும்பாலான மின்கம்பங்கள் பல மாதங்களாக அங்கேயே கிடப்பதால் சேதம் அடைந்துள்ளன.
இந்த மின்கம்பங்களை நடும்போது அவை உடைந்து விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படியே நடப்பட்டாலும் சில நாட்களிலே அவை விழும் நிலை ஏற்படலாம். மேலும் மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவத்தால் இந்த பணியில் ஈடுபடும் மற்ற மின்வாரிய தொழிலாளர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே மின்வாரிய தொழிலாளர்களின் அச்சத்தை அகற்றவும், இருப்புள்ள மின்கம்பங்கள் சேதமின்றி உள்ளதா என ஆய்வு செய்யவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தரமற்ற மின்கம்பங்களை தவிர்க்கும் பொருட்டு உரிய ஆய்வுகள் செய்திடவும் மின்வாரியமும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story