கெங்குவார்பட்டி அருகே பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் திறந்தவெளியில் பாடம் படிக்கும் மாணவர்கள்


கெங்குவார்பட்டி அருகே  பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் திறந்தவெளியில் பாடம் படிக்கும் மாணவர்கள்
x
தினத்தந்தி 8 Sept 2019 3:48 AM IST (Updated: 8 Sept 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

கெங்குவார்பட்டி அருகே பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் திறந்தவெளியில் பாடம் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி,

கெங்குவார்பட்டி அருகே உள்ள பாலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில்் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து இருந்தன. பொதுமக்களின் கோரிக்கையால் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்காக கடந்த ஜூலை மாதம் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

வகுப்பறைகள் முழுவதும் இடிக்கப்பட்டதால், மாற்று இடம் இல்லாமல் இப்பள்ளி மாணவ, மாணவிகள் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர். கழிப்பறை கட்டிட சுவரில் கருப்பு நிறத்தில் பெயிண்டு அடித்து அதை கரும்பலகை போல பாவித்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இதுபோல கெங்குவார்பட்டி அருகே ஜி.மீனாட்சி புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து இருந்ததால் புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் மாற்று இடம் இல்லாததால் மாணவ, மாணவிகள் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர். அங்குள்ள ரோட்டோரத்தில் உள்ள திறந்தவெளி மேடையில் கரும்பலகை இல்லாமலேயே பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே இந்த 2 பள்ளிகளுக்கும் புதிதாக கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story