தனியார் நிறுவனங்களில் பணி: வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்
தொழிலாளர் துறை சார்பில் தனியார் நிறுவனங் களில் பணியாற்ற புதுவையில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.
புதுச்சேரி,
புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் தனியார் நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள 400-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த முகாம் காந்தி நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள காலை முதலே இளைஞர்களும், இளம்பெண்களும் திரண்டு வந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்ததால், அங்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர்களை கட்டுப்பத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.
முகாமில் கலந்துகொண்டவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து, அதில் திறமையானவர்களை தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் நிறுவனங்களுக்கு தேர்வு செய்தனர். இந்த முகாமை அமைச்சர் கந்தசாமி, தொழிலாளர் துறை கூடுதல் செயலாளரும், வேலைவாய்ப்பு இயக்குனருமான வல்லவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அதிகாரி மரிஜோசபின் சித்ரா செய்திருந்தார்.

Related Tags :
Next Story