புதுவை அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி


புதுவை அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 8 Sept 2019 5:15 AM IST (Updated: 8 Sept 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் அரசு முழுதோல்வி அடைந்தது நிரூபணம் ஆகி உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது சட்டமன்ற விதிகளை மதிக்காமல் செயல்பட்டனர்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக ஒரு நாளைக்கு முன்னதாகவே கூட்டத்தை முடித்துவிட்டனர். தனிநபர் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இன்றும் (நேற்று) கூட்டத்தை நடத்த கேள்விகள், முக்கிய பிரமுகர்களுக்கான பார்வையாளர் மாட அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்னதாக கூட்டத்தை முடித்துள்ளனர்.

அவசரமாக கூட்டத்தை முடிக்க எந்த நிகழ்வும் புதுச்சேரியில் நடக்கவில்லை. கூட்டத்தை முடிக்கவும் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கேட்கவில்லை. இந்தநிலையில் கூட்டத்தை முடித்தது சிறுபிள்ளைத்தனமான செயல். இது அரசின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ளாதது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர எங்கள் கட்சி தலைமை விரும்பாது. எங்கள் கட்சி தலைமையின் அனுமதி பெற்று புதுவை அரசு மீது நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story