வெள்ள நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி அறிவிப்பது எப்போது? தினேஷ் குண்டுராவ் கேள்வி


வெள்ள நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி அறிவிப்பது எப்போது? தினேஷ் குண்டுராவ் கேள்வி
x
தினத்தந்தி 7 Sep 2019 11:58 PM GMT (Updated: 7 Sep 2019 11:58 PM GMT)

மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறிய தாவது:-

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 22 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு சென்றனர். ஆனால் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்திய குழுவினர் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றனர். அதன் பிறகும் நிதியை ஒதுக்கவில்லை.

பிரதமர் 7-ந் தேதி பெங்களூருவுக்கு வரும்போது, வெள்ள பாதிப்புகள் குறித்து அவருடன் பேசுவதாக எடியூரப்பா கூறினார். ஆனால் பிரதமரை முதல்-மந்திரி சந்திக்கவில்லை. பெங்களூருவுக்கு வந்த பிரதமர் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி உதவியை அறிவிக்கவில்லை.

சந்திரயான்-2 விண்கல நிகழ்வை பார்த்துவிட்டு பிரதமர் சென்றுவிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை பிரதமரிடம் தெரிவிக்க முதல்-மந்திரியால் முடியவில்லை. வெள்ள நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி உதவியை அறிவிப்பது எப்போது?. குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார். 

Next Story