உரிய சிகிச்சை அளிக்காததால் வாலிபர் சாவு: தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
உரிய சிகிச்சை அளிக்காததால் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதனையடு்த்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
அனுப்பர்பாளையம்,
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செம்மாண்டம்பாளையம் அனந்தபுரத்தை சேர்ந்த துரைசாமியின் மூத்த மகன் நவீன்குமார் (வயது 22). விசைத்தறி தொழிலாளி. கடந்த மாதம் 8-ந்தேதி சோமனூர் அருகே விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 1 மாதமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை அளிக்க விரும்புவதாக நவீன்குமாரின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறி உள்ளனர்.
ஆனால் சிகிச்சை பெற செலவாகும் தொகையை லோன் மூலமாக நாங்கள் ஏற்பாடு செய்வதால் இங்கேயே சிகிச்சை அளிக்கலாம் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. பின்னர் நேற்று முன்தினம் மருத்துவமனை நிர்வாகம் திடீரென லோன் கிடைக்காததால் நீங்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை செலுத்தி உள்ள ரூ.5½ லட்சம் போக மீதி தொகையை செலுத்திய பின்புதான் நவீன்குமாரை அழைத்து செல்ல வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து 108 ஆம்புலன்சு மூலமாக நவீன்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமாரின் பெற்றோர், உறவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் திருப்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் (பொ) தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் போராட்டத்தை கைவிட்டு, முறையாக புகார் வழங்குமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து நவீன்குமாரின் தந்தை 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
தனியார் மருத்துவமனையில் 1 மாதம் தனது மகன் சிகிச்சை பெற்றும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சை அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலும் செலுத்த வேண்டிய மீதி தொகைக்காக தனது மோட்டார்சைக்கிளையும் பறித்துக்கொண்டனர். எனவே இதுபோன்ற உரிய சிகிச்சை அளிக்காமல், கட்டாய பண வசூல் செய்யும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Tags :
Next Story