கை, கால்களை கட்டிப்போட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொன்றவர் கைது - உத்தரபிரதேசத்தில் சிக்கினார்


கை, கால்களை கட்டிப்போட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொன்றவர் கைது - உத்தரபிரதேசத்தில் சிக்கினார்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து கொலை செய்தவரை போலீசார் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் கல்யாண் கிழக்கு உம்ரேகாவ் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் குமார். இவரது மனைவி ரேகா. ஆட்டோ டிரைவரான இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனால் அவர்களுக்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று விக்ரம் குமார் சொந்த ஊருக்கு செல்வதற்காக மனைவியை அழைத்து உள்ளார். ஆனால் ரேகா வர மறுத்து உள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர் ரேகாவின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். தகவல் அறிந்த மகாத்மாபுலே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய விக்ரம் குமாரை தேடி வந்தனர். இதில் அவர் உத்தரபிரதேசத்திற்கு தப்பி சென்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சாருசவுரா தாலுகா புரானா கிராமத்தில் பதுங்கி இருந்த விக்ரம் குமாரை கைது செய்தனர். மேலும் அவரை கல்யாண் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

Next Story