குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம்
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
குலசேகரன்பட்டினம்,
கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், குலசேகரன்பட்டினத்தில் நடந்தது.
திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.
அதன் பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் கூறியதாவது;-
தசரா திருவிழாவில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு வரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் பெயர் மற்றும் முகவரி கொண்ட அடையாள அட்டை காவல்துறை சார்பில் வழங்கப்படும். இதன்மூலம் காணாமல் போன குழந்தைகளை அடையாளம் காண்பது எளிதாகும். வாகனங்கள் வந்து செல்ல ஒருவழிபாதை ஏற்படுத்தப்பட உள்ளது. முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் 3 புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதோடு அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. வேடம் அணிந்து வரும் பக்தர்கள் இரும்பு போன்ற உலோகங்களினால் ஆன ஆயுதங்கள் எடுத்து வர அனுமதியில்லை. சாதி மற்றும் கட்சி கொடிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story