சோழசிராமணி அருகே, விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை


சோழசிராமணி அருகே, விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 9 Sept 2019 3:45 AM IST (Updated: 9 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

சோழசிராமணி அருகே விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர், 

பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே உள்ள மாரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாரிவள்ளல் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோகுலபிரியா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் பாரிவள்ளல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்திஅடைந்த பாரிவள்ளல் விஷமாத்திரை தின்று உயிருக்கு போராடினார். இதைப்பார்த்து கோகுலபிரியா அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து பாரிவள்ளல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பாரிவள்ளல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story