மாவட்ட செய்திகள்

50-வது ஆண்டு பிறந்தநாள் பொன் விழா: நமச்சிவாயத்துக்கு சோனியா காந்தி வாழ்த்து; நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம் + "||" + 50th Anniversary Happy Birthday: Sonia Gandhi congratulates Namachchivayam

50-வது ஆண்டு பிறந்தநாள் பொன் விழா: நமச்சிவாயத்துக்கு சோனியா காந்தி வாழ்த்து; நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம்

50-வது ஆண்டு பிறந்தநாள் பொன் விழா: நமச்சிவாயத்துக்கு சோனியா காந்தி வாழ்த்து; நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம்
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வில்லியனூர்,

புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு நேற்று 50-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி மாநிலம் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காங்கிரஸ் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டும், விதவிதமான கட் அவுட்டுகள் வைத்தும் காங்கிரஸ் கட்சியினர் விழா கொண்டாடினார்கள்.


பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் முக்கிய இடங்களில் விழா ஏற்பாடு செய்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் புதுவை முழுவதும் ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் விழா கொண்டாடினார்கள். இந்த விழாக்களில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினார்.

பிறந்தநாளையொட்டி புதுவையில் உள்ள முக்கிய பிரமுகர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சார்பில் அதன் நிர்வாகிகள் நமச்சிவாயத்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். ரூபாய் நோட்டு, மலர் மாலை, பூச்செண்டு, பொன்னாடை அணிவித்தும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி புதுவை மாநிலமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

டெல்லியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பொதுச்செயலாளர்கள் குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக், மகளிர் காங்கிரஸ் செயலாளர் நக்மா, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2. மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்.மந்திரிகள் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் மந்திரிகள் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
3. பிறந்தநாளை கொண்டாட சென்ற மருத்துவ மாணவி, எரிமலை வெடிப்பில் பலியான பரிதாபம்
பிறந்தநாளை கொண்டாட நியூசிலாந்து சென்ற மருத்துவ மாணவி, எரிமலை வெடிப்பில் பரிதாபமாக பலியானார்.
4. மராட்டியத்தில் பதவியேற்பு விழா; பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம்
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
5. பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகிறது -சோனியா காந்தி கடும் விமர்சனம்
பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகிறது என்று சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.