விளையாட்டு வீரர்களுக்கு ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை
மத்திய ஆடிட்டர் இயக்குனரகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கணக்குத் தணிக்கையாளர்களின் (ஆடிட்டர்) பொது தலைமை கணக்காயர் அமைப்பு சுருக்கமாக சி.ஏ.ஜி. எனப்படுகிறது. புதுடெல்லியில் உள்ள இந்த தலைமை அலுவலகத்தில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் தமாத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஆக்கி போன்ற விளையாட்டுகளில் சாதித்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஒவ்வொரு விளையாட்டிலும் உள்ள காலியிடங்கள் மற்றும் எங்கெங்கு காலியிடங்கள் உள்ளன என்ற விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இவர்கள் அக்கவுண்டன்ட் ஜெனரல், பிஆர். அக்கவுண்ட் ஜெனரல் போன்ற பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
விளையாட்டுத் தகுதி:
பணியிடங்கள் உள்ள விளையாட்டுப் பிரிவில் மாநிலம் அல்லது தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவில் முதுநிலை அல்லது இளையோர் விளையாட்டுகளில் சாதனை படைத்திருக்க வேண்டும். இவர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித் திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஆடிட்டர்/அக்கவுண்டன்ட் பணிக்கும், கிளார்க் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தில் புகைப்படம் ஒட்டி விவரங்களை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட் களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு ஆகஸ்டு 31 செப்டம்பர் 6 தேதியிட்ட ‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வி மற்றும் விளையாட்டு சாதனை களுக்கு ஏற்ப தகுதியானவர்கள் தேர்வு முறைக்கு அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்த்தல், திறமைத் தேர்வின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப படிவம் பெறவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.cag.gov.in>recuitment notices>sports quota என்ற இணைப்பில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story