மாவட்ட செய்திகள்

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம், தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது + "||" + Fury for not paying for alcohol Youth arrested for murdering father

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம், தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம், தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது
மது குடிக்க பணம் தராததால் தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சரவணம்பட்டி,

கோவை சரவணம்பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). இவருடைய மகன் குமரவேல் (31). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாக வில்லை. இவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவா் வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

குடிப்பழக்கத்தை கைவிட்டு, வேலைக்கு செல்லுமாறு குமரவேலிடம், கிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி குமரவேல் தனது தந்தை கிருஷ்ணனிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் கிருஷ்ணன் பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த குமரவேல் அங்கு கிடந்த விறகு கட்டையால் கிருஷ்ணனின் ஓங்கி அடித்து விட்டு தப்பி சென்றார்.

இதில் நிலைகுலைந்து போன கிருஷ்ணன் ரத்த வௌ்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். உயிருக்கு ஆபத்தானநிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் அவா் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்தனா். மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜபாளையம் அருகே பரபரப்பு: துப்பாக்கி-17 தோட்டாக்களுடன் வாலிபர் கைது
ராஜபாளையம் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் சாராயம் காய்ச்சிய வாலிபரை துப்பாக்கி மற்றும் 17 தோட்டாக்களுடன் போலீசார் கைது செய்தனர்.
2. பண்ருட்டி அருகே பரபரப்பு: வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் - வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பண்ருட்டி அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
3. பந்தலூரில், சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது - தாய், தங்கை மீது வழக்கு
பந்தலூரில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்ததாக அவரது தாய், தங்கை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. விபசார பெண்ணாக சித்தரித்து நடிகைக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
விபசார அழகியாக சித்தரித்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ‘பீட்சா’ வினியோகம் செய்யும் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
5. ஏ.டி.எம். மையத்தில், விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் அபேஸ் - உதவி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய வாலிபர் கைது
ஏ.டி.எம். மையத்தில் விவசாயிக்கு உதவுவது போல் நடித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.