பாரதீய ஜனதாவின் புகார் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கவேண்டும் தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு


பாரதீய ஜனதாவின் புகார் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கவேண்டும் தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2019 12:41 AM GMT (Updated: 10 Sep 2019 12:41 AM GMT)

பாரதீய ஜனதா கட்சியினரின் புகார் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுவை,

புதுவை பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் கவர்னர் கிரண்பெடியை நேற்று சந்தித்தனர். அப்போது இலவச அரிசி கொள்முதல், வினியோகம், தரம் ஆகியவற்றில் தவறுகள் நடப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.

குறிப்பாக தரமற்ற இலவச அரிசி வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை நிலுவையில் உள்ளது, ரேஷன் கடைகள் அனைத்து தினங்களிலும் திறக்கப்படாததால் பொதுமக்களால் அரிசியை பெற முடியவில்லை, எடை அளவில் முறைகேடு நடக்கிறது எனவும், இ-டெண்டர் முறை பின்பற்றப்படவில்லை, மக்களால் வாங்கப்படாத இலவச அரிசி கணக்கில் கொண்டுவரப்படாமல் முறைகேடு நடக்கிறது என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கவர்னர் கிரண்பெடியிடம் புகார் மனுவினையும் அளித்தனர். இந்த மனுவினை கவர்னர் கிரண்பெடி தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் புகார்கள் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை தரவும் தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

Next Story