6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நெல் கொள்முதலுக்குரிய முன்னேற்பாடுகளை உடனடியாக தொடங்கிட வேண்டும். நுகர்பொருள் வாணிபகழக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ.) தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கலியபெருமாள், நிர்வாகிகள் சுப்பிரமணியன், கணேசன், பாலு, ரகுபதி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story