மாவட்டம் முழுவதும் 10 தாசில்தார்கள் இடமாற்றம்


மாவட்டம் முழுவதும் 10 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 11 Sept 2019 4:15 AM IST (Updated: 10 Sept 2019 11:54 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 10 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 10 தாசில்தார்களை அதிரடியாக இடமாற்றம் செய்து, கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி ஆத்தூர் தாசில்தார் பிரபா திண்டுக்கல் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும், முத்திரைத்தாள் தனி தாசில்தார் சக்திவேலன் நிலக்கோட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், நிலக்கோட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் பாண்டிசெல்வி திண்டுக்கல் மேற்கு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் லட்சுமி பழனி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், நிலக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் யூஜின் நிலக்கோட்டை தாசில்தாராகவும், நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் வேடசந்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், வேடசந்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சிவசுப்பிரமணியன் குஜிலியம்பாறை தாசில்தாராகவும் மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

மேலும் குஜிலியம்பாறை தாசில்தார் காளிமுத்து நத்தம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், நத்தம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் சந்திரன் நிலக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், நீதித்துறை பயிற்சி முடித்து திரும்பிய தாசில்தார் அரவிந்த் ஆத்தூர் தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story