பர்கூர் பேரூராட்சியில் 31 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- கடைக்காரர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
பர்கூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 31 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள், கடைக்காரர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பர்கூர்,
பர்கூர் பேரூராட்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) சுகந்தி தலைமையில் அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, பர்கூர் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, துணிக்கடைகள், உணவகங்கள், இறைச்சி கடைகள், தள்ளுவண்டிகள், இனிப்பகங்களில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட 31 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி துணை கலெக்டர் கூறுகையில், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், தலைமை எழுத்தர் வெங்கடாசலம், இளநிலை உதவியாளர் சாமுண்டீஸ்வரி, துப்புரவு மேற்பார்வையாளர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் செந்தில்நாதன், கிராம நிர்வாக அலுவலர் சம்சுதின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story