மாவட்ட செய்திகள்

நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் + "||" + Tirunelveli The lawyers demonstrated

நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை, 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை மறுபரிசீலனை செய்ய விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில் அவரது இடமாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்தினம் ஐகோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், கோர்ட்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று தலைமை நீதிபதியின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், கோர்ட்டுகள் முன்பு ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையிலும் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சிவசூரியநாராணயன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். வக்கீல் சங்க செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் மந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் ஜாபர்அலி, ஜோதிமுருகன், பால்ராஜ், மணிகண்டன், ரமேஷ், சுதர்சன், பழனி, பொன்.ராஜேந்திரன், கார்த்திக், பாரதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.