மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருபா சங்கர் சிங் கட்சியில் இருந்து விலகினார் பா.ஜனதாவில் சேர முடிவு?
மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருபா சங்கர் சிங் நேற்று காங்கிரசில் இருந்து விலகினார்.
மும்பை,
மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருபா சங்கர் சிங் நேற்று காங்கிரசில் இருந்து விலகினார்.
கிருபாசங்கர் சிங்
மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனாவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மந்திரியுமான கிருபா சங்கர் சிங் நேற்று காங்கிரசில் இருந்து விலகியதாக அறிவித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சென்று இருந்தார். இதனால் அவர் பா.ஜனதாவில் சேருவார் என்று கூறப்பட்டது. ஆனால் தான் பா.ஜனதாவில் சேரப்போவதில்லை என்றும், அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவு எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகியதாக கிருபாசங்கர் சிங் தெரிவித்து உள்ளார்.
நடிகை ஊர்மிளா மடோங்கர், கிருபாசங்கர் சிங் ஆகியோர் ஒரே நாளில் காங்கிரசில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்ஷவர்தன் பாட்டீல்
இதற்கிடையே மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஹர்ஷவர்தன் பாட்டீல் பா.ஜனதாவுக்கு தாவ முடிவு செய்து இருப்பதாக பேசப்பட்டு வந்தது. அவர் இன்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல காங்கிரஸ் தலைவர் அனந்த்ராவ் பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் கணேஷ் நாயக் ஆகியோரும் பா.ஜனதாவில் இன்று இணைவார்கள் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story