மு.க.ஸ்டாலின் மதுரை வருகை
பரமக்குடியில் நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மதுரை வந்தார்.
மதுரை,
இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று(புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் காரில், மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மு.க.ஸ்டாலினை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார். பின்னர் மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் இரவு தங்கினார்.
இன்று காலை மு.க.ஸ்டாலின் பரமக்குடிக்கு செல்கிறார்.
அங்கு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
அதன்பின்பு அவர் சிவகாசியில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
அதனை முடித்து கொண்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
Related Tags :
Next Story