நீர் மேலாண்மை குறித்து கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் - கலெக்டர் ஆய்வு
நீர் மேலாண்மை குறித்து கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கட்டி அனுப்பும் பணி நடைபெற்றது. கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட வழங்கல் துறை சார்பில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லவாடியில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் கியாஸ் சிலிண்டர்களில் ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கட்டி அனுப்பும் பணி நடைபெற்றது.
அந்த துண்டு பிரசுரத்தில் வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு அமைக்க வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.
இந்த பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், தாசில்தார் அமுல், துரிஞ்சாபுரம் ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், தனியார் கியாஸ் குடோன் உரிமையாளர் சரண்யா உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story