தசரா யானைகளின் பாகன்களுக்கு புதிய சீருடை மந்திரி சோமண்ணா வழங்கினார்
மைசூருவில், தசரா யானைகளின் பாகன் களுக்கு மந்திரி சோமண்ணா புதிய சீருடையை வழங்கினார்.
மைசூரு,
மைசூருவில், தசரா யானைகளின் பாகன் களுக்கு மந்திரி சோமண்ணா புதிய சீருடையை வழங்கினார்.
தசரா விழா
உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் யானைகள் புடை சூழ, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அர்ஜூனா யானை சுமந்து செல்வதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் அர்ஜூனா யானைதான் தங்க அம்பாரியை சுமக்க உள்ளது. மேலும் தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள் 2 கட்டங்களாக பல்வேறு யானைகள் முகாம்களில் இருந்து மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. அவைகளுக்கு நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
புதிய சீருடைகள்
இந்த நிலையில் யானைகளின் பாகன்களும், அவர்களுடைய குடும்பங்களும் வசிக்க மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் பாகன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி மைசூரு அரண்மனை வளாகத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், தசரா விழா பொறுப்பாளருமான சோமண்ணா கலந்து கொண்டு தலைமை தாங்கி பாகன்களுக்கு கவுரவ தொகையை வழங்கினார்.
மேலும் அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் காலை உணவு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு இட்லி, தோசை, வடை, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது. அதையடுத்து பாகன்களுக்கு புதிய சீருடைகளை மந்திரி சோமண்ணா வழங்கினார்.
சமையல் பொருட்கள்
மேலும் பாகன்களின் குடும்பத்தினருக்கு அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், மண்எண்ணெய் அடுப்பு ஆகியவையும் வழங்கப்பட்டது. விழாவில் மந்திரி சி.டி.ரவி, எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், நாகேந்திரா, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், வனத்துறை அதிகாரி அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story