காஞ்சீபுரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் டெங்கு தடுப்பூசி போடுவது அவசியம் மாவட்ட கலெக்டர் வலியுறுத்தல்

காஞ்சீபுரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் டெங்கு தடுப்பூசி போடுவது அவசியம் மாவட்ட கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 6:08 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல்

காஞ்சீபுரம் மாவட்டம் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, ‘காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் டிப்தீரியா காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பள்ளி அங்கன்வாடி மற்றும் வீடுகளில் உள்ள 17 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும். இம்மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 57 ஆயிரத்து 739 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 769 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி

மீதமுள்ள குழந்தைகளுக்கு வருகிற நாட்களில் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு குழந்தைகளின் பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும் அனைத்து வட்டார மற்றும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்படும்’ என்றார்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜீவா, துணை இயக்குனர் செந்தில்குமார்பழனி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதய சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story