நாமக்கல்லில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி - அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 9 வயது சிறுமி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி செம்பாளிகரடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் தீபிகா (வயது 9). இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த காய்ச்சல் விட்டுவிட்டு வந்தது.
இதையடுத்து சிறுமியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர் சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோல் நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த சாபிதிரி (21) என்ற வாலிபரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பரிசோதனை செய்யப்பட இருப்பதாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தனிவார்டில் வைத்து பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story