மாவட்ட செய்திகள்

தலைவாசல்-வீரகனூர் பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை + "||" + Public demand for construction of bridges in Thalawasal to Veeranagar

தலைவாசல்-வீரகனூர் பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தலைவாசல்-வீரகனூர் பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தலைவாசல்-வீரகனூர் பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல்-வீரகனூர் பிரிவு பகுதியில் ஒரு மேம்பாலமும், சார்வாய்- மணிவிழுந்தான் பிரிவு பாதையில் ஒரு மேம்பாலமும், தலைவாசல் முதல் சார்வாய் பிரிவு பாதை வரை இருபுறமும் இணைப்பு பாதைகளும் அமைக்க வேண்டி கடந்த 2012-ம் ஆண்டு முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பல காரணங்களால் இந்த முயற்சி முழுமை பெறவில்லை. இதைத்தொடர்ந்து தலைவாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இந்த திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி கோரிக்கை மனுவை பொதுமக்கள் வழங்கினார்கள். அந்த மனுவை தாகூர், பாரதியார், மாருதி, பாவேந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமிநாராயணன், பாரதியார் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஏ.கே.ராமசாமி, மாருதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் செல்வம், தேவியாக் குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவர் பாலு ஆகியோர் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட வானதி சீனிவாசன், ரெயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார்.