திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் ; 14-ந் தேதி நடக்கிறது


திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் ; 14-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 7:33 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வருகிற 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் ஒரு கிராமத்தில் நடைபெற உள்ளது.

திருப்பூர்,

அவினாசி தாலுகாவில் வேட்டுவபாளையம் கிராமத்துக்கு அ.குரும்பபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் வேலம்பாளையம் கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் செல்லப்பம்பாளையம் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் கொமரலிங்கம் கிராமத்துக்கும், தாராபுரம் தாலுகாவில் சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் அவினாசிபாளையம் கிராமத்துக்கு வேலம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.

இதுபோல் பல்லடம் தாலுகாவில் சுக்கம்பாளையம் கிராமத்துக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும், காங்கேயம் தாலுகாவில் கீரனூர் கிராமத்துக்கு மரவபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உள்ளனர். புதிய ஸ்மார்ட் கார்டுக்கான மனுக்கள், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் செய்ய விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story