காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஹர்ஷவர்தன் பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தார் கணேஷ் நாயக் 50 கவுன்சிலர்களுடன் கட்சி தாவினார்
காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஹர்ஷவர்தன் பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் கணேஷ் நாயக் ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
மும்பை,
காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஹர்ஷவர்தன் பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் கணேஷ் நாயக் ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
கட்சி தாவும் தலைவர்கள்
மராட்டியத்தில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இரண்டு கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆளும் பா.ஜனதா, சிவசேனாவில் சேர்ந்து வருகின்றனர்.
மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தங்களது தலைவர்கள் கட்சி தாவி வருவது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமைகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணேஷ் நாயக்
இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஹர்ஷவர்தன் பாட்டீல் சட்ட சபை தேர்தலில் தான் போட்டியிட விரும்பும் இந்தாப்பூர் தொகுதியை தேசியவாத காங்கிரஸ் விட்டுக் கொடுக்காத விரக்தியில் காங்கிர சில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரும் முடிவை எடுத்தார்.
அதன்படி மும்பையில் நேற்றுஅவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு மாநில பா.ஜனதா மந்திரி சந்திரகாந்த்பாட்டீல் கட்சி துண்டு மற்றும் கொடியை வழங்கினார்.
இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில், நவிமும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்த முன்னாள் மந்திரி கணேஷ் நாயக், தனது மகனான முன்னாள் எம்.பி. சஞ்சீவ் நாயக் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
Related Tags :
Next Story