மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து சாவு காந்திவிலியில் பரிதாபம்


மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து சாவு காந்திவிலியில் பரிதாபம்
x
தினத்தந்தி 12 Sept 2019 5:02 AM IST (Updated: 12 Sept 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

காந்திவிலியில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை, 

காந்திவிலியில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் மனைவி

மும்பை காந்திவிலி சம்தாநகர் பகுதியை சேர்ந்தவர் கிஷான் தோத்ரே. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2½ வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியதால் கணவர்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டது.

இதனால் இவரது மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து கிஷான் தோத்ரே மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு வரும்படி பலமுறை அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது மனைவி வீட்டிற்கு வர மறுத்து விட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அவர் மனைவிக்கு வீடியோ கால் மூலம் போன் செய்தார்.

தீ குளித்து தற்கொலை

இதில் அவர் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் அவர் மண்எண்ணெயை உடம்பில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இருப்பினும் அவரது மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த கிஷான் தோத்ரே உடம்பில் தீ வைத்துக்கொண்டார்.

இதில் அவர் மீது தீ பற்றியதால் வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர் மீது பற்றிய தீயை அணைத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சம்தாநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story