மாவட்ட செய்திகள்

நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் விலக வேண்டும் - பழனியில், நடிகர் கருணாஸ் பேட்டி + "||" + Actor Vishal must resign from the club - Interview with actor Karunas in Palani

நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் விலக வேண்டும் - பழனியில், நடிகர் கருணாஸ் பேட்டி

நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் விலக வேண்டும் - பழனியில், நடிகர் கருணாஸ் பேட்டி
நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கூறினார். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் நேற்று பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழனி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்தது வரவேற்கத்தக்கது. எனவே வெளிநாட்டு நிறுவனங்களை ஒரு தமிழனாக வரவேற்க வேண்டும். இதை விளம்பர வெளிச்சத்திற்காக யார் விமர்சித்தாலும் தவறு. ஏனெனில் விமர்சிப்பவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், அவர்களும் வெளிநாடு செல்ல நேரிடும் என்பதை சிந்திக்க வேண்டும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பெரும் பாலான மக்கள் வரவேற்கின்றனர். ஒரே நாட்டுக்குள் இருவேறு சட்டங்கள் இருப்பது என்பது தவறானது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடம் திறக்கப்படும் நேரத்தில், நாமக்கல்லை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கோர்ட்டு வரை சென்றது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈகோவை விட்டுவிட்டு வர வேண்டும். குறிப்பாக நடிகர் விஷாலும், ஐசரி கணேசும் சொந்த பிரச்சினைகளை தவிர்த்து சங்கத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும் அல்லது சங்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம்
இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம் தயாராக உள்ளது.