மாவட்ட செய்திகள்

பான்மசாலா, குட்கா கொண்டு செல்லும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் ரத்துகலெக்டர் ஷில்பா எச்சரிக்கை + "||" + Panamasala, Kutka-carrying vehicles Driving license revoked

பான்மசாலா, குட்கா கொண்டு செல்லும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் ரத்துகலெக்டர் ஷில்பா எச்சரிக்கை

பான்மசாலா, குட்கா கொண்டு செல்லும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் ரத்துகலெக்டர் ஷில்பா எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா கொண்டு செல்லும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை, 

தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா கொண்டு செல்லும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்து குட்கா தடை அமல்படுத்துதல் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க மாவட்ட எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்களிடம் நிக்கோடின் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும்.

கோவில்களில்...

பாதுகாக்கப்பட்ட உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கதில் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் உணவு தொழிலை வரன்முறைபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தனியார் பள்ளி, கல்லூரி வளாகத்தில் உள்ள கடைகளுக்கு விரைவாக உரிமம் பெற வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் உணவு பொருட்களுக்கு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஸ், மாநகர நகர்நல அலுவலர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.