மாவட்ட செய்திகள்

செம்பனார்கோவில் அருகே, பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை + "||" + Near Sembanarkovil, Bakery worker commits suicide by hanging

செம்பனார்கோவில் அருகே, பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

செம்பனார்கோவில் அருகே, பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
செம்பனார்கோவில் அருகே பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாணியப்பட்டியை சேர்ந்த மாது என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 21). இவர், நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனால் வெங்கடேஷ், அந்த பகுதியில் ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்தார். இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினமும் காலை வழக்கம்போல் வேலைக்கு செல்லும் வெங்கடேஷ் சம்பவத்தன்று நீண்டநேரமாகியும் பேக்கரிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள், அவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு வெங்கடேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வெங்கடேசின் தந்தை மாது கொடுத்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வகுப்பறையில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை ஒரு தலைக்காதலால் விபரீதம்
கன்னியாகுமரி அருகே ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவர் வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. புதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை
புதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. சாணார்பட்டி அருகே அரளி விதைகளை அரைத்து குடித்து கர்ப்பிணி தற்கொலை
சாணார்பட்டி அருகே அரளி விதைகளை அரைத்து குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
4. திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை
திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்க போலீசார் வர தாமதமானதால் பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
5. தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை